டெஸ்ட் கிரிக்கெட் ஆல்ரவுண்டர் தரவரிசை: தமிழக வீரர் அஸ்வின் தொடர்ந்து முதலிடம்

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
டெஸ்ட் கிரிக்கெட் ஆல்ரவுண்டர் தரவரிசை: தமிழக வீரர் அஸ்வின் தொடர்ந்து முதலிடம்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் ஆல்ரவுண்டர் தரவரிசையில் தமிழக வீரர் அஸ்வின் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார், ஜடேஜா 6வது இடத்தில் உள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தரவரிசையை பட்டியலை வெளியிட்டுள்ளது, இதில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-0 என கைப்பற்றியது. 

இந்த தொடரில் அஸ்வின் 31 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மேலும் 124 ரன்கள் அடித்தார், இதனால் அஸ்வின் தொடர்ந்து ஆல்ரவுண்டர் தரவரிசையின் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளார், அதேசமயம் பந்துவீச்சு தரவரிசையில் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார்.

இவரை தவிர தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் 23 விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா 6-வது இடத்தில் உள்ளார்.

பேட்டிங் தரவரிசையில் ரஹானே 10வது இடத்தை ஆஸ்திரேலிய வீரர் ஆடம் வோக்சுடன் பகிர்ந்துகொண்டுள்ளார். விராட் கோலி 14 வது இடத்தில் உள்ளார்.

மூலக்கதை