ஞானசார தேரர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி!

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
ஞானசார தேரர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி!

Wednesday, 27 January 2016 14:02

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சுகயீனமுற்ற நிலையில் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் இன்று புதன்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதனிடையே, ஞானசார தேரர் பௌத்தத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டுள்ளதாக அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் கலகம அத்ததஸ்ஸி தேரர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை