ஆஸ்திரேலிய ஓபன்: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சானியா-ஹிங்கிஸ் இணை

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
ஆஸ்திரேலிய ஓபன்: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சானியாஹிங்கிஸ் இணை

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் இணை, இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. 

மகளிர் இரட்டையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் ஒன் இணையான இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் இணை, ஜெர்மனியின் ஜூலியா ஜியார்ஜியஸ், செக் குடியரசின் கரோலினா ப்ளிஸ்கோவா இணையை எதிர்கொண்டது.

இதில் அபாரமாக விளையாடிய சானியா இணை முதல் செட்டை 6-1 என எளிதாக கைப்பற்றியது. தொடர்ந்து இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய சானியா இணை தொடர்ந்து புள்ளிகளைக் குவித்து 6-0 என கைப்பற்றி நேர் செட்டில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியது. 

மூலக்கதை