தாய்வானில் கடும் பனிப்பொழிவு; 80க்கு அதிகமானோர் உயிரிழப்பு!

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
தாய்வானில் கடும் பனிப்பொழிவு; 80க்கு அதிகமானோர் உயிரிழப்பு!

Wednesday, 27 January 2016 05:43

தாய்வானில் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் பனிப்பொழிவு காரணமாக 80க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

தாய்வானின் தலைநகர் தாய்பே உள்ளிட்ட நகரங்களில் கடந்த 44 ஆண்களில் காணப்படாத அளவுக்கு கடும் பனிப்பொழிவு நீடிக்கின்றது. ஆகக்கூடிய வெப்பநிலையாக 4 பாகை செல்சியஸ் வெப்பமே இருக்கின்றது.

இதனால், 80க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு, விவசாயம் உள்ளிட்ட தொழில் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை