திருவாரூர் பயணம் வெற்றி: மு.கருணாநிதி

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
திருவாரூர் பயணம் வெற்றி: மு.கருணாநிதி

Wednesday, 27 January 2016 05:55

தமது திருவாரூர் பயணம் வெற்றிகரமாக முடிந்துள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். 

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை செய்தியாளர்களை சந்தித்த கருணாநிதி, தமது இரண்டு நாள் திருவாரூர் பயணம் வெற்றி கரமாக முடிந்துள்ளது என்று கூறினார்.முன்னதாக எழும்பூர் ரயில் நிலையத்தில் திமுக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்திட, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், போலி வாக்காளர்களைக் கண்டறிந்து களைய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.அதோடு, அதிமுகவின் பணப் பட்டுவாடா குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.

 

மூலக்கதை