​ஆஸி - நியூசிலாந்து தொடர்: ஆஸி. தலைமை பயிற்சியாளர் டேரன் லேமன் விலகல்

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
​ஆஸி  நியூசிலாந்து தொடர்: ஆஸி. தலைமை பயிற்சியாளர் டேரன் லேமன் விலகல்

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியில் ரத்த உறைவு காரணமாக பயிற்சியாளர் டேரன் லெக்மன் விலகியுள்ளார். 

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே தற்போது இருபது ஓவர் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நரம்பில் ஏற்பட்டுள்ள ரத்த உறைவு காரணமாக ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் Darren Lehmann பயிற்சி அளிக்க முடியாமல் ஓய்வில் உள்ளார். 

இதனையடுத்து, ஆஸ்திரேலிய அணி அடுத்த மாதம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. இதற்காக, பிப்ரவரி 1 ஆம் தேதி ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து புறப்பட்டுச் செல்கிறது. 

நியூசிலாந்து செல்லும் அணியில் பயிற்சியாளர் Darren Lehmann ஓய்வில் இருப்பதால் செல்லவில்லை என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய மருத்துவக்குழு நிபுணர்கள் கூறுகையில், நரம்பில் ரத்த உறைவு சரியாகாததால், அவரால் நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொள்ள முடியாது எனவும், வரும் வெள்ளிக்கிழமை Darren Lehmann க்கு ஸ்கேன் செய்ய உள்ளது. 

ஸ்கேன் அடிப்படையில் அவரது உடல்நலம் மேம்பாடு குறித்து தெரிவிக்க முடியும் எனவும் தெரிவித்தனர். 

மூலக்கதை