​மெக்சிகோ: மாரிஜுவானா பயிரிடுவதை சட்டப்பூர்வமாக்குவது தொடர்பாக தேசிய அளவில் விவாதம்

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
​மெக்சிகோ: மாரிஜுவானா பயிரிடுவதை சட்டப்பூர்வமாக்குவது தொடர்பாக தேசிய அளவில் விவாதம்

மெக்சிகோவில் மரிஜுவானா பயிரிடுவதைச் சட்டப்பூர்வமாக்குவது தொடர்பாக தேசிய அளவில் விவாதம் நடத்தப்படுகிறது. 

உலக அளவில் போதைப்பொருள் கடத்தும் கும்பல்கள் அதிகம் செயல்படும் நாடுகளில் மெக்சிகோவும் ஒன்று. இந்நிலையில், களைப்பைப் போக்குவதற்காக மாரிஜுவானா பயன்படுத்துவதை அனுமதித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டின் இறுதியில் தீர்ப்பு அளித்தது. 

இதைத் தொடர்ந்து, மாரிஜுவானா பயிரிடுவதை சட்டப்பூர்வமாக்குவது தொடர்பாக முடிவெடுக்க மெக்சிகோ நாட்டு நாடாளுமன்ற அனைத்து உறுப்பினர்களும் திறந்த மேடையில் விவாதம் நடத்தினர். 

இருப்பினும், அதிபர் பீனா நீட்டோ, மாரிஜுவானாவுக்கு அங்கீகாரம் அளிக்க விரும்பவில்லை. இதே போல் நேற்றைய விவாததில் பங்கேற்ற பெரும்பாலானோர், மாரிஜுவானாவுக்கு அனுமதியளிப்பதை ஏற்கவில்லை. 

இது தொடர்பாக விரைவில் தேசிய அளவில் விவாதம் நடத்தப்படும் என அதிபர் அறிவித்துள்ளார்.

மூலக்கதை