​ஆசிய சிலம்பம் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக அணிக்கு உற்சாக வரவேற்பு

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
​ஆசிய சிலம்பம் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக அணிக்கு உற்சாக வரவேற்பு

ஆசிய சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக அணிக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

3வது ஆசிய சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியானது மலேசியாவில் கடந்த 22 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா, பங்களாதேஷ், இந்தோனேசியா உள்ளிட்ட 11 நாடுகளிலிருந்து மினி சப் ஜூனியர், சப் ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் ஆகிய பிரிவுகளில் 500 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 

இதில் இந்தியாவில் இருந்து 55 வீரர்கள் பங்கேற்றனர். தமிழகத்திலிருந்து 40 வீரர்கள் இந்திய அணியில் இடம் பெற்றிருந்தனர். இதில் மினி சப் ஜூனியர் ஆடவர், சப் ஜூனியர் மகளிர், ஜூனியர் மகளிர், சீனியர் ஆடவர் மற்றும் மகளிர் என இந்திய அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. 

பதக்கம் வென்று நாடு திரும்பிய தமிழக அணிக்கு சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் சென்னையை சேர்ந்த மாஸ்டர் பாண்டியன் அணியிலிருந்து 12 வீரர்கள் பங்கேற்றதில் 23 தங்கம், 14 வெள்ளி, மற்றும் 11 வெண்கலப்பதக்கம் வென்றுள்ளனர். 

மூலக்கதை