பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சமூக வலைப்பின்னல்கள் ஊடாக பாலியல் சுரண்டல் மோசடி.

CANADA MIRROR  CANADA MIRROR
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சமூக வலைப்பின்னல்கள் ஊடாக பாலியல் சுரண்டல் மோசடி.

னடா- யோர்க் பிராந்திய பொலிசார் எண்ணிக்கையான ஆண்கள் சமூக ஊடகங்களில் தங்களை பெண்கள் போல் காட்டிக்கொண்டு பல ஆண்களை பாலியல் மோசடிகளிற்கு ஆளாக்கி வந்துள்ளனர் எனவும் இது சம்பந்தமாக தாங்கள் புலன்விசாரனையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட ஆண்களை அறிமுகமற்ற சந்தேக நபர்கள் தங்களை பெண்கள் என்ற பாவனையுடன் வெளிப்படுத்துகின்றனர். பின்னர் இந்த சந்தேக நபர்கள் பாதிக்கப்பட்ட ஆண்களை நிர்வாணமாகவும் பாலியல் நடத்தைகளை மேற்கொள்ளுமாறும் ஊக்கு வித்து இரகசியமாக பதிவு பதிவு செய்யப்படுகின்றது என புலன்விசாரனையாளர்கள் கூறியுள்ளனர்.
அடுத்த நடவடிக்கையாக சந்தேக நபர்களிற்கு அவர்கள் கேட்கும் பணத்தை மின்னணு நிதி பரிமாற்றம் மூலம் அனுப்பாவிட்டால் இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிடுவதுடன் மின் அஞ்சல் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் அனுப்பி வைக்கப்படும் எனவும் பாதிக்கப்பட்டவர்களிற்கு கூறப்பட்டுள்ளது.
இது ஒரு வகையான உலகளாவிய மிரட்டி பணம் பறிக்கும் மோசடி என விசாரனையாளர்கள் நம்புகின்றனர். இந்த வழக்குகளில் பாதிக்கப்பட்ட ஆண்கள் ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்கள் என தெரிவில்லை எனவும் யோர்க் பிராந்திய பொலிசார் செவ்வாய்கிழமை செய்தி வெளியீடு ஒன்றில் கூறியுள்ளனர்.
மின் அஞ்சல் அல்லது சமூக வலைப்பின்னல் தளங்களில் அந்நியர்களிடமிருந்து கிடைக்க பெறும் செய்திகள் குறித்து அவதானமாக இருக்குமாறும் இது தொடர்பான எந்த செய்திகளையும் கிளிக் செய்ய வேண்டாமெனவும் பொலிசார் பொது மக்களை எச்சரிக்கின்றனர்.
இந்த ஆன்லைன் மோசடி குறித்த தகவல்கள் தெரிந்தவர்களை 1-866-876-5423 ext. 2664யில் பொலிசாருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

18 total views, 18 views today

மூலக்கதை