பரவுகிறது ’சிகா’ வைரஸ்; பெண்கள் கர்ப்பம் தரிக்கவேண்டாம் அவசர எச்சரிக்கை

CANADA MIRROR  CANADA MIRROR
பரவுகிறது ’சிகா’ வைரஸ்; பெண்கள் கர்ப்பம் தரிக்கவேண்டாம் அவசர எச்சரிக்கை

கொசு மூலம் ‘சிகா’வைரஸ் பரவுவதை அடுத்து 2018-ம் ஆண்டுவரையில் பெண்கள் கர்ப்பம் தரிக்கவேண்டாம் என்று தென் அமெரிக்க நாடுகள் அறிவுரை வழங்கிஉள்ளது.

தென் அமெரிக்காவில் கொசுக்களால் கொடிய ‘சிகா’ வைரஸ் பரவுகிறது. ‘சிகா’ வைரஸ் குழந்தைகளை பெரிதும் பாதிக்கிறது. ’சிகா’ வைரஸ் பச்சிளம் குழந்தைகளை, குறைபாடு உள்ள குழந்தைகளாக மாற்றிவிடுகிறது. பிரேசில், கொலம்பியா, எல்-சல்வடோர் உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளில் வைரஸ் பரவலால் பெரிதும் அச்சம் நிலவி வருகிறது. ‘சிகா’ வைரஸ் தாக்கத்தால் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சிக் குறைபாடு நிகழ்கிறது என்பது மருத்துவ ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இதனையடுத்து அங்கு வைரஸ் பரவலை தடுப்பதற்கு தென் அமெரிக்க நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சுற்றுலா வரும் பயணிகளுக்கும் எச்சரிக்கையானது விடுக்கப்பட்டு உள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்-சல்வடோர் அரசு பெண்கள் யாரும் அடுத்த 2 வருடங்களுக்கு மேலாக கருத்தரிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு உள்ளது. குழந்தைகளை மூளையை முற்றிலுமாக பாதிக்கும் என்று நம்பப்படும் நிலையில், குழந்தைகள் குறையுடன் பிறப்பதை தவிர்ப்பதற்காக இந்த கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையானது எடுக்கப்பட்டு உள்ளது.

இப்பிராந்தியத்தில் உள்ள பார்பாடோஸ், பொலிவியா, குவாதலூப்பே, கவுதமாலா, பனமா உள்ளிட்ட சுமார் 20 நாடுகளில் வைரஸ் பரவல் காணப்படுகிறது என்று உலக சுகாதார நிலையம் தெரிவித்து உள்ளது.

கொசுக்கள் இத்தகைய வைரசை பரப்பிவரும் நிலையில் இந்நாடுகள் ஒருங்கிணைந்த மருத்துவ நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளன. கடந்த 1940-ம் ஆண்டே ’சிகா’ வைரஸ் தாக்கமானது பதிவாகிஉள்ளது என்று கூறப்படுகிறது. இதனது பாதிப்பு கடந்த பல மாதங்களாக எல்-சல்வடோரில் காணப்பட்டு உள்ளது. பிரேசில் நாட்டிலும் பாதிப்பு அதிகமான காணப்படுகிறது.

2015- மே மாதம் பிரேசிலில் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 4 மாதங்களில் சிறு தலையுடன் சுமார் 4000 ஆயிரம் குழந்தைகள் பிறந்ததற்கு ‘சிகா’ வைரஸ் பாதிப்பே காரணம் என்று அதிகாரிகள் அறிக்கை பெற்று உள்ளனர். குழந்தைகளின் நிலையானது மிகவும் வழகத்திற்கு மாறாகவே உள்ளது.

முழுவதும் வளர்ச்சியடையாத மூளையுடன் குழந்தைகள் பிறக்கிறது. பிரேசில் எல்லையில் உள்ள கொலம்பியாவிலும் வைரஸ் பரவிஉள்ளது. அங்கும் 13,000 த்திற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அங்கும் சில மாதங்களுக்கு பெண்கள் கருத்தரிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

இதேபோன்று, ஜமைக்கா, ஹண்டுராஸ் ஆகிய நாடுகளிலும் பெண்கள் கர்ப்பம் தரிக்கவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

எல்-சல்வடோரில் கடந்த வருடம் மற்றும் 2016- தொடக்கத்தில் மட்டும் சுமார் 5000 பேருக்கு பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கடும் நடவடிக்கையை எடுத்து உள்ளது, அந்நாட்டு சுகாதாரத் துறை மந்திரி எஸ்பினோசா, வரும் 2018-ம் ஆண்டு வரையில் பெண்கள் கர்ப்பம் தரிக்கவேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

மத்திய அமெரிக்க நாட்டில் கடந்த நவம்பர் மாதம் முதலில் ’சிகா’ வைரஸ் பாதிப்பு காணப்பட்டு உள்ளது. வைரஸ் மாதிரிகள் அமெரிக்காவிற்கு அனுப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறிஉள்ளார்.

”முடிந்தவரையில் குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிபோடுங்கள் என்று கேட்டுக் கொண்டு உள்ளோம். ’சிகா’வைரஸ் பாதிப்பால் நாங்கள் அவதிப்படுவது இதுவே முதல்முறையாகும், முதல் தாக்குதல் எப்போதுமே மோசமானதே,” என்றும் எல்-சல்வடோவர் மந்திரி கூறிஉள்ளார். ரோமன் கத்தோலிக் பிராந்தியமான இப்பகுதியில் பெண்கள் கருத்தடை செய்ய அரசுக்கள் கேட்டுக் கொண்டு உள்ளதற்கு, இந்த மோசமான சூழ்நிலையில் கிறிஸ்தவ ஆலயங்கள் கண்டனம் தெரிவித்து உள்ளன. பேராயர் ஒரு அதிகாரப்பூர்வ விடையிறுப்பைச் நேரம் இல்லை என்று.

கொசுக்கள் தங்கும் இடங்களில் அழிப்பதற்கான சிறப்பு பணிகள் எடுக்கப்பட்டு வருகிறது. கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தங்களை கொசுக்கள் கடித்துவிடாத நிலையில், தோலை மூடிக்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

பிராந்தியத்தில் உள்ளநாடுகள் வானொலி மற்றும் தொலைக்காட்சிகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை பரப்பிவருகின்றன. இதற்கிடையே ’சிகா’ வைரஸ் அமெரிக்காவிற்கும் பரவலாம் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது.

165 total views, 165 views today

மூலக்கதை