20 ஓவர் கிரிக்கெட்: ​ஆஸ்திரேலியாவை விழ்த்தியது இந்தியா

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
20 ஓவர் கிரிக்கெட்: ​ஆஸ்திரேலியாவை விழ்த்தியது இந்தியா

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 

அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டகாரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். 

விராட் கோலி அதிரடியாக 90 ரன்கள் அடித்து அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினார். சுரேஷ் ரெய்னா நிலைத்து நின்று ஆடி 41 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் களமிறங்கிய கேப்டன் தோனி வழக்கம் போல் ஹெலிகாப்டர் ஷாட் அடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். 

நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி 188 ரன்கள் குவித்தது. 

இதனை தொடர்ந்து 189 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டகாரர் ஃபின்ச் 41 ரன்களில் வெளியேறினார். அடுத்த வந்த வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இறுதியில் 3 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலிய அணி, 151 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 37 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

மூலக்கதை