மியன்மாரில் வரும் மாதம் புதிய அரசு பதவியேற்பு; ஆங் சான் சூகி இராணுவத் தளபதியுடன் சந்திப்பு!

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
மியன்மாரில் வரும் மாதம் புதிய அரசு பதவியேற்பு; ஆங் சான் சூகி இராணுவத் தளபதியுடன் சந்திப்பு!

Tuesday, 26 January 2016 11:34

இராணுவ ஆட்சியின் கீழ் நீண்டகாலமாக இருக்கும் மியன்மாரில் ஜனநாயக அரசாங்கம் எதிர்வரும் மாதம் பதவியேற்கவுள்ள நிலையில், புதிய அரசாங்கத்தின் பிரதமராக பதவியேற்கவுள்ள ஆங் சான் சூகி, அந்நாட்டின் இராணுவத் தளபதி மின் ஆங் ஹெலாங்கைச் சந்தித்துள்ளார். 

மியான்மரில் கடந்த ஆண்டு செப்டம்பர், மாதம் நடந்த பாராளுமன்றத் தேர்தலில், ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. புதிய அரசாங்கம் எதிர்வரும் மாதம் முதல் ஆட்சியமைக்கவுள்ளது.

இந்நிலையில் சட்டமன்றத்தை ஜனநாயக தன்மையிலான பாராளுமன்றத்தில் ஒப்படைக்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இராணுவ தளபதி மின் ஆங் ஹெலாங்கை ஆங் சான் சூகி சந்தித்து பேசியுள்ளார். இச்சந்திப்பு அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் நடைபெறுவதற்கான முயற்சியாக கருதப்படுகிறது.

மூலக்கதை