ஹைதராபாத் மாணவர் தற்கொலைக்கு குரல் கொடுத்த அரசியல்வாதிகள் இப்போது எங்கே?:எஸ்விஎஸ் மாணவர்கள்

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
ஹைதராபாத் மாணவர் தற்கொலைக்கு குரல் கொடுத்த அரசியல்வாதிகள் இப்போது எங்கே?:எஸ்விஎஸ் மாணவர்கள்

Tuesday, 26 January 2016 08:40

ஹைதராபாத் மாணவர் தற்கொலையின் போது குரல் கொடுத்த அரசியல் வாதிகள் எங்களை கண்டுக்கொள்ளாமல் விட்டது ஏன் என்று, கள்ளக்குறிச்சி எஸ்விஎஸ் இயற்கை மருத்துவக் கல்லூரி தலித் மாணவர்கள் கேள்வி வைத்துள்ளனர்.

கடந்த வாரம் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள எஸ்விஎஸ் மருத்துவக் கல்லூரியில் படித்த 3 மாணவிகள் தற்கொலை செய்துக் கொண்டனர் என்று கூறப்பட்டது.இதையடுத்து மாணவிகள் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்கிற சந்தேகமும் வலுத்து வரும் நிலையில், தலைமறைவாக இருந்த கல்லூரி தாளாளர் நேற்று விழுப்புரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

இதுக்குறித்து சமூகத்தில் பலவேறு கருத்துக்கள் நிலவி வரும் நேரத்தில், அக்கல்லூரி தகுதிச் சான்றிதழ் பெறவில்லை என்று தகவல் வெளியானது. இதையடுத்து கல்லூரியில் நிர்கதியாக நிற்கும், 98 தலித் மாணவர்கள், அரசு
தேர்ந்து எடுத்துக் கொடுத்த கல்லூரியில் நாங்கள் பணம் கட்டிப் படிக்க சேர்ந்தோம். ஆனால், இங்கு கல்லூரியே பல் வேறு முறைகேடுகளுடன் இயங்கி வருகிறது.தலித் மாணவர்களாகிய நாங்கள் இப்போது நிர்கதியாக இருக்கிறோம். ஹைதராபாத் மாணவர் தற்கொலைக்கு குரல் கொடுத்த அரசியல் வாதிகள் எங்களது பிரச்சனையைக் கண்டு மவுனியாக நிற்பது ஏன் என்று கேள்வி எழுப்புகின்றனர்.

அதோடு ஊடகங்களும், பத்திரிகைகளும் கூட இந்த விவகாரத்தில் மவுனம் காக்கிறது என்றும், அரசியல் வாதிகள் ஆளுக்கொரு கல்லூரியை சொந்தமாக வைத்திருப்பதால்தான் இப்படி கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார்கள் என்றும், பத்திரிகைகள் தங்களது கல்வி மலருக்கு இதுப்போன்ற கல்லூரிகளை விளம்பரத்துக்காக நம்பி இருக்கிறார்கள், எனவேதான் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார்கள் என்றும் சர்ச்சை எழுந்துள்ளது.

 

மூலக்கதை