சினிமா தியேட்டர்கள், ஹொட்டல்கள், வங்கிகள் 24 மணி நேரமும் செயல்பட புதிய சட்டம்

NEW INDIA NEWS  NEW INDIA NEWS
சினிமா தியேட்டர்கள், ஹொட்டல்கள், வங்கிகள் 24 மணி நேரமும் செயல்பட புதிய சட்டம்

சினிமா தியேட்டர்கள், ஹொட்டல்கள், வங்கிகள் ஆகியவை 24 மணி நேரம் செயல்பட புதிய சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய தொழிலாளர் துறை செயலாளர் சங்கர் அகர்வால் கூறுகையில், சினிமா தியேட்டர்கள், ஐ.டி நிறுவனங்கள் 24 மணி நேரமும், வருடத்தின் 365 நாட்களும் வேலை செய்ய அனுமதிக்கப்படும்.

நாங்கள் மாநிலங்களுக்கு ஆலோசனைகளை வழங்க இருக்கிறோம். இதற்கு நாடாளுமன்ற ஒப்புதல் தேவையில்லை.

இதை மாநிலங்கள் அப்படியே ஏற்றுக் கொள்ளலாம் இல்லையென்றால் மாற்றங்கள் கொண்டு வரலாம்.

கடைகள் மற்றும் நிறுவனங்கள் இது தொடர்பான மற்ற சட்டங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும்.

சேவைத் துறையின் வருமானம் உயர இந்த மாற்றம் உதவும் என்று தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த மாதிரி சட்ட வரைவை மாநிலங்கள் தங்களுக்கு ஏற்ப மாற்றிகொள்ள முடியும்.

இந்த சட்டம் அரசு அலுவலகங்கள் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஆகிய இரண்டிற்கும் பொருந்தாது.

இந்திய பணியாளர் கூட்டமைப்பின் தலைவர் ரிதுபர்னா சக்ரவர்த்தி கூறுகையில், தொழில் புரிவதற்கான சூழலை எளிதாக்குவதை இந்த சட்டம் ஊக்கப்படுத்தும்.

மேலும் தொழிலாளர் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளவேண்டும்.

தற்போதைய சூழ்நிலையில் குறிப்பாக இ-காமர்ஸ் துறை 365 நாட்கள் மற்றும் நாள் முழுவதும் இயங்க வேண்டிய சூழல் உள்ளது.

தொழில்துறைக்கு இந்த சட்டம் மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மூலக்கதை