பத்தாயிரம் ரூபாய்க்கு எத்தனை தோசை வாங்கலாம்? ரிசர்வ் வங்கி கவர்னர் சொல்லிய குட்டிக்கதை

NEW INDIA NEWS  NEW INDIA NEWS
பத்தாயிரம் ரூபாய்க்கு எத்தனை தோசை வாங்கலாம்? ரிசர்வ் வங்கி கவர்னர் சொல்லிய குட்டிக்கதை

பத்தாயிரம் ரூபாய்க்கு எத்தனை தோசை வாங்கலாம் என்ற கேள்வி மூலம் பணவீக்கம் பற்றி ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் விளக்கமளித்துள்ளார்.

மும்பையில் சி.டி. தேஷ்முக் பொருளாதார ஆய்வு மையத்தில் உரையாற்றிய ரகுராம் ராஜன் பணவீக்கம் பற்றி விளக்கமளித்துள்ளார்.

அவர் தனது உரையில், ஒரு நாட்டின் பண வீக்கம் என்பது ஒரு மனிதனை ஓசைப்படாமல் கொல்லும் வியாதி போன்றது.

இதற்கு நான் ‘தோசை பொருளாதாரம்’ பற்றி சொல்லி புரிய வைக்க விரும்புகிறேன்.

எங்களுக்கு ஓய்வூதியம் பெறும் முதியோரிடம் இருந்து வரும் கடிதங்கள் மூலம் கிடைத்த தகவல்களை வைத்து இந்த கதையை சொல்கிறேன்.

ஓய்வூதியம் பெறும் முதியவர் ஒருவர் ஹொட்டலில் தோசை வாங்க விரும்புகிறார். தோசை விலை 50 ரூபாய்.

அவருக்கு வங்கி டிபாசிட் மூலம் ஆண்டு இறுதியில் வட்டியுடன் அசல் சேர்த்து 10 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது.

10 ஆயிரத்துக்கு 50 ரூபாய் வீதம் 200 தோசை வாங்கலாம். சரி, பணவீக்கத்தால் ஒரு பக்கம் அவரின் வங்கி டிபாசிட் மீதான வட்டி குறைகிறது.

இன்னொரு பக்கம் தோசை விலையும் 10 சதவீதம் ஏறி விடுகிறது. விளைவு, அவரால் 10 ஆயிரம் ரூபாய் வந்தாலும் 200க்கு பதில் 182 தோசைதான் வாங்க முடிந்தது.

அடுத்த முறை பணவீக்க உயர்வால் அவரின் வங்கி டிபாசிட் பணம் 8 ஆயிரம் ரூபாய்தான் வந்தது.

தோசை விலையே ₹57.50 ரூபாய்க்கு போகிறது. அப்போது அவரால் முன்பை விட 40 தோசை குறைவாகவே வாங்க முடிகிறது.

இப்படி தான் ஒரு தனி மனிதனை பணவீக்கம் பாதிக்கிறது. ஒவ்வொரு துறையிலும், பொருட்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இதை உயர விடாமல் பார்த்து கொள்ள வேண்டியது நம் பொறுப்பு என தெரிவித்துள்ளார்.

மூலக்கதை