ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியிலும் தோற்றது இந்தியா

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 20, ஜனவரி 2016 (23:56 IST)

மாற்றம் செய்த நாள் :20, ஜனவரி 2016 (23:56 IST)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியிலும் தோற்றது இந்தியா

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கான்பெராவில் புதன்கிழமை நடைபெற்றது. 3 ஆட்டத்திலும் தோற்று தொடரை இழந்த இந்திய அணியில் இன்றைய போட்டியில் ஆறுதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் களமிறங்கியது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 348 ரன்கள் குவித்தது. இதையடுத்து 349 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 323 ரன்களில் ஆல்அவுட் ஆகி, 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

மூலக்கதை