பாகிஸ்தான் பெஷாவரில் பல்கலைக்கழகத்துக்குள் துப்பாக்கி தாக்குதல்; 20க்கும் அதிகமானோர் பலி!

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
பாகிஸ்தான் பெஷாவரில் பல்கலைக்கழகத்துக்குள் துப்பாக்கி தாக்குதல்; 20க்கும் அதிகமானோர் பலி!

Wednesday, 20 January 2016 09:07

பாகிஸ்தானின் பெஷாவர் நகரிலுள்ள பச்சாகான் பல்கலைக்கழகத்துக்குள் இன்று புதன்கிழமை காலை புகுந்த பயங்கரவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 20க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். 60க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். 

மூன்று துப்பாக்கிதாரிகளே தாக்குதலை மேற்கொண்டதாக தாக்குதலில் தப்பிய மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, பாகிஸ்தான் இராணுவம் பதில் தாக்குதல்களை நடத்தி மாணவர்களை மீட்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றது.

மூலக்கதை