இளையராஜாவுக்கு எவ்ளோ கொடுத்தாங்க?

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
இளையராஜாவுக்கு எவ்ளோ கொடுத்தாங்க?

Wednesday, 20 January 2016 08:42

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தாரை தப்பட்டை 1000 வது படம்.

இதற்காக பிரமாண்டமாக ஒரு விழா எடுக்க வேண்டும் என்று பாலாவும், தமிழ் திரையுலகமும் நினைத்திருக்க வெள்ளம் வந்து எல்லாவற்றையும் கெடுத்தது. இருந்தாலும் அரசு சார்பில் அவரை கவுரவித்திருக்கலாம் என்ற முணுமுணுப்பு இங்கு கேட்காமல் இல்லை. ஆனால் அதையே உரக்க சொல்கிற அளவுக்கு ஒருவருக்கும் தைரியமில்லை. நல்லவேளையாக அவரை அழைத்து கவுரவிக்க தயாராகி வருகிறது கேரள படவுலகமும் அந்த மாநில அரசும். இப்படியெல்லாம் சங்கடங்களும் சந்தோஷங்களும் மாறி மாறி வர, இளையராஜாவுக்கு நிஜமாகவே வேறொரு சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது ஒரு தனியார் தொலைக்காட்சி. அந்த வாயாடி பெண்ணுடன் அவர் உரையாடப் போகும் நிகழ்ச்சியை காண இப்போதே மக்கள் ஆர்வமாக காத்திருக்க, தன்னார்வத்துடன் ஒரு பெரும் தொகையை இளையராஜாவுக்கு வழங்கியதாம் டி.வி.நிர்வாகம். பாட்டுத் தலைவருக்கு பச்சை நோட்டுகளின் பாராட்டு விழா. கேட்கவே சந்தோஷமா இருக்குல்ல?

தாரை தப்பட்டை : திரை விமர்சனம்

மூலக்கதை