Wonder Woman திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ

நேற்றிரவு, 2017ல் வெளியாகயுள்ள வார்னர் ப்ரோஸின் Wonder Woman திரைப்படத்தின் முதல் பார்வை வெளியிடபட்டது. DC comics-ன் புதிய கதாபாத்திரங்களை குறித்த சிறப்பு ஒளிபரப்பில் இந்த முதல் காட்சிகள்
வெளியிடப்பட்டன.
கேல் கேடொட் மற்றும் கிறிஸ் பைன் நடிக்கும் இந்த படம் அமேசான் இளவரசியின் வாழ்கையை குறித்தாக அமையும். பேட்மேன், சூப்பர்மேன் ஆகிய கதாபாத்திரங்களின் தோற்றம் மற்றும் வாழ்கை அனைவருக்கும்
தெரியும். ஆனால், அமேசான் இளவரசியான Wonder Womann-னின் தோற்றமும், வாழ்க்கையும் ரசிகர்களுக்கு தெரியாது. எனவே, இத்திரைப்படம் அமேசான் இளவரிசியின் வாழ்கையையும், அவரது மிஷனையும் விவரிப்பதாக இருக்கும்.
முதல் காட்சியிலே கேல் கேடொட் தீயவர்களுடன் சண்டையிடும்படி இருந்தது ரசிகர்களிடையே படத்தை குறித்த எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது. Suicide squad, Dead pool ஆகிய திரைப்படங்களின் ட்ரைலர் பார்த்த உற்சாகத்தில் இருந்து மீளாத ரசிகர்களுக்கு இது மேலும் உற்சாகத்தைச் சேர்த்துள்ளது.
மூலக்கதை
