குடியேற்றவாசிகளிடம் ஆங்கில மொழிப் புலமைச் சோதனை விரைவில்; பிரித்தானியா அறிவிப்பு!

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
குடியேற்றவாசிகளிடம் ஆங்கில மொழிப் புலமைச் சோதனை விரைவில்; பிரித்தானியா அறிவிப்பு!

Tuesday, 19 January 2016 07:02

பிரித்தானியாவில் குடியேறிவுள்ள வெளிநாட்டிவர்களிடம் ஆங்கில மொழிப் புலமைச் சோதனை விரைவில் நடத்தப்படவுள்ளதாகவும், அதில், தோற்பவர்கள் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் அந்நாட்டின் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். 

“பிரித்தானியாவில் வசிக்கும் பெண்கள் உள்ளிட்ட அனைவரும் ஆங்கில மொழிப் புலமை பெற்றிருப்பது அவசியம். எனவே, இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக பிரித்தானியாவில் தங்கியிருக்கும் பெண்களுக்கு ஆங்கில தேர்வு நடத்தப்பட வேண்டியது அவசியம். ஒக்டோபர் மாதம் முதல் இந்த கொள்கை செயல்படுத்தப்படும். அதற்குள் தயார்படுத்திக்கொண்டு தேர்வில் வெற்றிப் பெறாதவர்கள் தங்களது சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

மூலக்கதை