ஆஸ்திரேலியாவின் பிக்பாஷ் தொடரில் சிட்னி தண்டர் அணி சாம்பியன்

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
ஆஸ்திரேலியாவின் பிக்பாஷ் தொடரில் சிட்னி தண்டர் அணி சாம்பியன்

ஆஸ்திரேலியாவின் பிக்பாஷ் தொடரின் 5-வது சீசன் கோப்பையில் சிட்னி தண்டர் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

இறுதி ஆட்டத்தில் ஹஸி சகோதரர்களின் மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணியும், சிட்னி தண்டர் அணியும் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சிட்னி தண்டர் அணியின் கேப்டன் மைக் ஹஸி பந்துவீச்சை தேர்வு செய்தார். 

இதனையடுத்து களமிறங்கிய மெல்பேர்ன் அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கெவின் பீட்டர்ஸன் 74 ரன்கள் எடுத்தார். 

பின்னர் ஆடிய சிட்னி தண்டர் அணி 7 விக்கெட்டுகளை இழந்து, மூன்று பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

மூலக்கதை