பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து அணி அபார வெற்றி

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து அணி அபார வெற்றி

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. 

நியூசிலாந்தின் வெல்லிங்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் நியூசிலாந்து அணியை பேட்டிங் செய்ய பணித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 280 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக,  நிக்கோல்ஸ் 82 ரன்களும், சாண்ட்னர், ஹென்றி தலா 48 ரன்களும் எடுத்தனர். 

பாகிஸ்தான் அணி சார்பில் முகமது அமிர், அன்வர் அலி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனை தொடர்ந்து 281 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக பாபர் அசாம் 62 ரன்கள் எடுத்தார். 

இறுதியில் 46 ஓவர்கள் முடிவிலேயே பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து அணி சார்பில் போல்ட் 4 விக்கெட்டும், எலைட் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். 

இதனால், 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என நியூசிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.

மூலக்கதை