நியூசிலாந்து வீரர் மிட்சேல் மெக்லநகன் முகத்தில் பந்து தாக்கி காயம்

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
நியூசிலாந்து வீரர் மிட்சேல் மெக்லநகன் முகத்தில் பந்து தாக்கி காயம்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் மிட்சேல் மெக்லநகன் முகத்தில் பந்து தாக்கி காயமடைந்தார்.

வெலிங்டனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தை பாகிஸ்தானின் அன்வர் அலி, நியூசிலாந்து வீரர் மெக்லநகன்-னுக்கு வீசினார். அந்தப் பந்து எகிறி, மெக்லநகன்-னின் ஹெல்மெட்டுக்குள் புகுந்து இடது கண்ணுக்கு மேல் கடுமையாக பதம் பார்த்தது. உடனடியாக அவர் வெளியேறினார்.

சிறிய அளவில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருப்பதால், பாகிஸ்தானுக்கு எதிரான எஞ்சிய இரண்டு ஒருநாள் ஆட்டங்களிலும் மெக்லநகன் ஆடமாட்டார் எனத் தெரிகிறது. இந்த அதிர்ச்சியான சம்பவம் பற்றி, செல்ஃபி எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மெக்லநகன், தன் உடல் நிலை குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் உள்ளூர் கிரிக்கெட் ஆட்டத்தின் போது,  ஆஸ்திரேலிய வீரர் ஃபிலிப் ஹியூஸ் உயிரிழந்தது குறிப்பிடதக்கது.

மூலக்கதை