ஹாலிவுட்டில் களம் இறங்கும் தனுஷ்

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
ஹாலிவுட்டில் களம் இறங்கும் தனுஷ்

கடந்த சில ஆண்டுகளாக கோலிவுட் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் தனது திறமையால் ரசிகர்களை ஈர்த்த நடிகர் தனுஷ், தற்போது ஹாலிவுட்டில் தடம் பதிக்க உள்ளார். தனது முதல் ஹாலிவுட் படத்தை இந்த ஆண்டு நடிக்க உள்ளார் தனுஷ்.

’சான் ஆண்டிரியாஸ்’ நடிகைகளுடன் தனுஷ்:

”The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard” என்ற படத்தில் தனுஷ் ஹாலிவுட் உலகிற்கு அறிமுகமாக உள்ளார். தனது முதல் படத்திலே சான் ஆண்டிரியாஸ் படத்தில் நடித்து புகழ் பெற்ற உமா தர்மன் மற்றும் அலெக்ஸாண்டிரா டட்டரியோவுடன் நடிக்கிறார், தனுஷ்.

தனுஷின் கதாப்பாத்திரம்:

ஒரு ரகசிய மிஸனிற்காக தன் தாயாரால் இந்தியாவில் இருந்து பேரிஸ் அனுப்பப்படும் மேஜிசியனாக நடிக்கிறார் தனுஷ். வேடிக்கையான,நகைச்சுவையான, கருணை உள்ளம் மிகுந்த மேஜிசியன் வேடத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக ஆங்கில நாளிதழிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார் இப்படத்தின் இயக்குனர்.

மேலும், இந்திய படங்களை பார்த்தப்போது தனுஷின் அறிவுத்திறமை,கில்ல்ர் ஸ்மைல் மற்றும் எந்த கதாப்பாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாப்பாத்திரமாகவே மாறும் திறன் ஆகியவைதான் அவரை தேர்வு செய்ததற்கான காரணம் என்று புகழாரம் சூட்டியுள்ளார் அப்படத்தின் இயக்குனர்.

இந்த ஆண்டு ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இப்படம் இந்தியா, ஃப்ரான்ஸ் மற்றும் மொரோக்கோவில் எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

இர்ஃபான், அனில் கபூர், ப்ரியாங்கா சோப்ரா, தீபிகா படுகோன் ஆகியோரின் வரிசையில் தமிழ் நடிகரான தனுஷ் இடம்பெற்றுள்ளது ரசிகர்களிடையே பெறும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை