சீன ஜனாதிபதி ஈரான் விஜயம்; 17 உடன்படிக்கைகள் கைச்சாத்து!

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
சீன ஜனாதிபதி ஈரான் விஜயம்; 17 உடன்படிக்கைகள் கைச்சாத்து!

Monday, 25 January 2016 06:28

ஈரான் மீதான சர்வதேச பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டுக்கான விஜயமொன்றை சீன ஜனாதிபதி ஸி ஜின் பிங் மேற்கொண்டுள்ளார். 

இந்த விஜயத்தின் போது, ஈரானின் ஜனாதிபதி ஹசன் ரோவ்ஹனியும் இருதரப்பு பேச்சுக்களில் சீன ஜனாதிபதி ஈடுபட்டார்.

இதனிடையே, சீனாவுக்கும், ஈரானுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகளை மேம்படுத்திக் கொள்வது உள்ளிட்ட 17 உடன்படிக்கைகளும் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைச்சாத்திடப்பட்டுள்ளன.

மூலக்கதை