ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 25, ஜனவரி 2016 (10:50 IST)

மாற்றம் செய்த நாள் :25, ஜனவரி 2016 (10:50 IST)

ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்

ராமேசுவரத்தில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க கூட்டம் தமிழ்நாடு விசைப்படகு மீனவர் சங்க பொது செயலாளர் போஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மீனவர் சங்க தலைவர்கள் தேவதாஸ், சேசுராஜா, எமரிட், சகாயம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், இலங்கையில் உள்ள 68 படகுகள் மற்றும் 7 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி நாளை (26-ந் தேதி) நாகப்பட்டினத்தில் மீனவர்கள் சார்பாக நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ராமேசுவரம் மீனவர்கள் கலந்து கொள்வது, இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (25-ந் தேதி) முதல் ராமேசுவரத்தில் அனைத்து விசைப்படகுகளும் மீன்பிடிக்க செல்லாமல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது. இவ்வாறு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மூலக்கதை