கருப்பு பணத்தை மீட்க சுவிட்சர்லாந்து அரசு முழு ஒத்துழைப்பு: அருண் ஜெட்லி

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
கருப்பு பணத்தை மீட்க சுவிட்சர்லாந்து அரசு முழு ஒத்துழைப்பு: அருண் ஜெட்லி

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்க, அந்நாட்டு அரசு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாக மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார். 

உலக பொருளாதார மன்ற மாநாட்டில் பங்கேற்க நிதியமைச்சர் அருண் ஜெட்லி சுவிட்சர்லாந்தின் டவோஸ் நகருக்கு சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சர்வதேச அளவில் கணக்கில் காட்டப்படாமல், வங்கிகளில் பதுக்கப்படும் பணத்திற்கு எதிராக, சுவிட்சர்லாந்து அரசு புதிய சட்டம் ஒன்றை கொண்டுவர முடிவு செய்துள்ளதாக கூறினார். 

இந்தச் சட்டம் அமலுக்கு வரும் வரை 2014ம் ஆண்டு செய்து கொண்டுள்ள ஏற்பாட்டின்படி, கருப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள் தொடர்பாக இந்தியா அளித்த ஆதாரங்களின் அடிப்படையில், சுவிட்சர்லாந்து அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மூலக்கதை