வடக்கில் புதிய தொழில் வாய்ப்புக்களுக்கான முதலீட்டுத் திட்டங்கள்: மைத்திரிபால சிறிசேன

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
வடக்கில் புதிய தொழில் வாய்ப்புக்களுக்கான முதலீட்டுத் திட்டங்கள்: மைத்திரிபால சிறிசேன

Monday, 25 January 2016 03:17

வடக்கு மாகாணத்திலுள்ள இளைஞர் யுவதிகளின் தொழில் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக உள்நாட்டு- வெளிநாட்டு முதலீட்டாளர்களின் உதவியுடன் எதிர்காலத்தில் புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

வடக்கிலும் தெற்கிலும் அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் வாழ்வதைக் காண்பதே தனது எதிர்ப்பார்ப்பாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, வடக்கு மக்களுக்கும் அபிவிருத்தியின் நன்மைகளைப் பெற்றுக்கொடுத்து அம்மக்களின் சகல பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறியுள்ளார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றை நேற்று ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தெரிவித்துள்ளதாவது, “மனிதர்களின் வாழ்வை மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்கு மணல், செங்கல் மற்றும் சீமேந்தினால் மட்டும் முடியாது. எப்போதும் மக்களின் உள்ளங்களை இணைப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதற்கு இடமளிக்காது எல்லா மக்களினதும் தேவைகளை நிறைவேற்றி அவர்கள் மத்தியில் சமாதானம், சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு புதிய அரசாங்கம் அர்ப்பணத்தோடு உள்ளது.” என்றுள்ளார்.

மூலக்கதை