தரவரிசையில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறிய ரோஹித் சர்மா

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
தரவரிசையில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறிய ரோஹித் சர்மா

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டதால், இந்திய வீரர் ரோஹித் சர்மா தரவரிசையில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின், முதல் நான்கு போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி, கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்றது.

இந்த தொடரில் ரோகித் சர்மா 441 ரன்கள் குவித்து முதலிடம் பிடித்ததோடு, தொடர் நாயகன் விருதையும் ரோஹித் சர்மா வென்றார். ஐந்து ஒருநாள் போட்டிகளையும் சேர்த்து ரோஹித் சர்மா 441 ரன்கள் குவித்ததால், ஐ.சி.சி. பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல்முறையாக 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

மற்ற இந்திய வீரர்களான விராட் கோலி 2வது இடத்திலும், தவான் 7வது இடத்திலும் உள்ளனர். தென்னாப்ரிக்காவின் டி வில்லியர்ஸ் 900 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

மூலக்கதை