​இந்தியா - ஆஸ்திரேலியா T-20 தொடர்: மேக்ஸ்வெல் முதல் போட்டியிலிருந்து விலகல்

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
​இந்தியா  ஆஸ்திரேலியா T20 தொடர்: மேக்ஸ்வெல் முதல் போட்டியிலிருந்து விலகல்

காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் விளையாடவில்லை.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை 4-1 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 20 ஓவர் போட்டி வரும் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. 

இந்த போட்டியில் தொடையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் மேக்ஸ்வெல் விளையாடவில்லை. காயம் காரணமாக மேக்ஸ்வெல் ஓய்வில் இருப்பதால், அடுத்த போட்டிக்கு தயாராகி அணியில் இடம் பிடிப்பார் என பயிற்சியாளர்  Michael Di Venuto தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே காயத்தால் ஆஸ்திரேலிய அணியில் டேரன் லேமனும் முதல் இருபது ஓவர் போட்டியில் விளையாட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மூலக்கதை