​மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் 2-ம் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் சிந்து

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
​மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் 2ம் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் சிந்து

மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். 

மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்று ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 12வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஸ்காட்லாந்து வீராங்கனை கில்மோர் கிரிஸ்டி-யை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தினார். 

33 நிமிடங்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே இந்திய வீராங்கனை சிந்துவின் ஆதிக்கமே இருந்தது. அபாரமாக விளையாடிய சிந்து முதல் செட்டை 21-15 என கைப்பற்றினார். 

தொடர்ந்து 2வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய சிந்து, அந்த செட்டையும் 21-9 என எளிதாக நேர் செட்டில் கைப்பற்றி, இந்த ஆண்டின் முதல் சாம்பியன் பட்டத்தை வென்றார். 

மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் சிந்து சாம்பியன் பட்டம் வெல்வது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக, 2013ஆம் ஆண்டு சிந்து சாம்பியன் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

மூலக்கதை