விளையாட்டு ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
விளையாட்டு ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

நாட்டிற்காக பதக்கங்களை கொண்டு வரும் திறமையான வீரர்களுக்கு விளையாட்டு ஆணையம் ஏன் இடையூறுகளை ஏற்படுத்துகிறது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

திருவாரூரை சேர்ந்த கார்த்திக் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இவ்வாறு நீதிபதி கேள்வி எழுப்பினார். டேக்வாண்டோ தேசிய போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்கள் பெற்றுள்ள தனக்கு தெற்காசிய விளையாட்டு போட்டியில் 54 கிலோ எடை பிரிவில் கலந்து கொள்ள இந்திய விளையாட்டு கழகத்துக்கு உத்தரவிட வேண்டும் என அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, விளையாட்டு ஆணையம் சார்பில் 2 வார காலம் தள்ளிவைக்க அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி, வரும் 25ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார். மேலும், திறமையான வீரர்களுக்கு ஏன் தடைகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் விளையாட்டு ஆணையத்துக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மூலக்கதை