ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி: 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா சாதனை வெற்றி

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 23, ஜனவரி 2016 (23:12 IST)

மாற்றம் செய்த நாள் :23, ஜனவரி 2016 (23:12 IST)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி: 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா சாதனை வெற்றி

5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் 4 ஆட்டங்களில் முறையே ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட், 7 விக்கெட், 3 விக்கெட் மற்றும் 25 ரன்கள் வித்தியாசங்களில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதோடு 4-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் தோனி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களம் இறங்கி பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 330 ரன்களை சேர்த்தது.

இதையடுத்து 331 எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி சிறப்பான தொடக்கம் பெற்றது. 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணியில் அதன் சொந்த மண்ணில் 300 ரன்களுக்கு மேல் வெற்றிகரமாக துரத்தி வெற்றி பெற்ற முதல் அணி இந்தியா என்ற பெருமையை இந்தியா பெற்றது. இந்த தொடரை 4-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் 26 ஆம் தேதி நடைபெறுகிறது.

மூலக்கதை