​கனடா சர்வதேச ஸ்குவாஷ்: அரையிறுதியில் தீபிகா பல்லிகல் அதிர்ச்சி தோல்வி

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
​கனடா சர்வதேச ஸ்குவாஷ்: அரையிறுதியில் தீபிகா பல்லிகல் அதிர்ச்சி தோல்வி

கனடாவில் நடைபெற்று வரும் சர்வதேச ஸ்குவாஷ் போட்டியின் அரையிறுதியில் இந்திய வீராங்கனை தீபிகா பல்லிகல் அதிர்ச்சி தோல்வியடைந்தார். 

17வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை தீபிகா பல்லிகல், தரவரிசையில் 28-வது இடத்தில் உள்ள கயானா வீராங்கனை ஃபெர்ணாண்டசுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் தீபிகா 10-12, 9-11, 9-11 என்ற நேர் செட்டில் அதிர்ச்சி தோல்வியடைந்து, தொடரிலிருந்து வெளியேறினார். 

கடந்த முறை தீபிகா பல்லிகல் கனடா ஸ்குவாஷில் 2-ம் இடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது..

மூலக்கதை