பாகிஸ்தானில் கல்வி நிலையங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும்; தலிபான் அச்சுறுத்தல்!

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
பாகிஸ்தானில் கல்வி நிலையங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும்; தலிபான் அச்சுறுத்தல்!

Saturday, 23 January 2016 04:26

பாகிஸ்தானிலுள்ள பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மீது தொடர்ந்தும் தாக்குதல் நடத்தப்படும் என்று தலிபான் அமைப்பின் தலைவர் அக்தர் முஹமட் மன்சூர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். 

பாகிஸ்தானின் சார்சத்தா நகரிலுள்ள பச்சாகான் பல்கலைக்கழகத்துக்குள் அண்மையில் நுழைந்து தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். இதில், 20க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலின் மூளையாக செயற்பட்ட அக்தர் முஹமட் மன்சூர், நேற்று வெள்ளிக்கிழமை வீடியோ செய்தியொன்றை வெளியிட்டுள்ளார். அதிலேயே, பாகிஸ்தானில் தொடர்ந்தும் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று அச்சுறுத்தியுள்ளார்.

அந்த வீடியோ செய்தியில் அவர் கூறியுள்ளதாவுது, “பாகிஸ்தானிலுள்ள கல்வி நிலையங்கள், மதப் புறக்கணிப்பாளர்களை உருவாக்கும் மையங்களாகத் திகழ்கின்றன. பாகிஸ்தானின் அரசியல், நீதி, பாதுகாப்பு, ஜனநாயகம் ஆகியவற்றுக்கு நாட்டின் மத விரோதக் கல்வி முறையே அடித்தளமாக உள்ளது.

பாகிஸ்தானின் முழு அரசியல் கட்டமைப்பும் மத விரோதிகளால் நிறைந்துள்ளது. இந்த நிலையை மாற்ற, அந்த மத விரோதிகளைத் தாக்குவதைக் காட்டிலும், அவர்களை உருவாக்கும் கல்வி நிலையங்கள் மீது தாக்குதல் நிகழ்த்துவதே சிறந்தது.

இராணுவ வீரர்களைத் தாக்குதவதைவிட, அவர்களைப் போன்றவர்களை உருவாக்கும் கல்வி நிலையங்களை அழிப்பது மிகுந்த பலனைத் தரும். எனவே, பாகிஸ்தானிலுள்ள கல்வி நிலையங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நிகழ்த்துவோம்.” என்றுள்ளார்.

மூலக்கதை