இந்தியா, ஆஸ்திரேலியா 4-வது ஒருநாள் போட்டி இன

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
இந்தியா, ஆஸ்திரேலியா 4வது ஒருநாள் போட்டி இன

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டி கான்பெரா மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது.

தோனி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மூன்றில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றி விட்டது. 

இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் நான்காவது ஒருநாள் போட்டி கான்பெராவில் இன்று நடைபெற உள்ளது. கடந்த ஆட்டங்களில் இந்திய அணியின் பேட்டிங் வரிசை வலுவாக இருந்தாலும், பந்துவீச்சாளர்கள் சொதப்புவதால்,ஆஸ்திரேலியாவின் வெற்றியை தடுக்க முடியவில்லை. 

எனவே கான்பெராவில் நடக்கும் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிப்பெற பந்துவீச்சில் மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டனர். 

இதனையடுத்து தொடர் தோல்விகளை கண்டு துவண்டுப்போன இந்திய அணி,வெற்றிக்கணக்கை துவக்குமா? என்னும் எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

மூலக்கதை