அம்மா என்றால் சரண்யா?

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
அம்மா என்றால் சரண்யா?

Friday, 22 January 2016 08:02

என்ன காரணம் என்றே தெரியவில்லை. பரபரவென நடித்துக் கொண்டிருந்த சரண்யா பொன்வண்ணன் இப்போது பெரும்பாலான படங்களை தவிர்த்து வருகிறார்.

இத்தனைக்கும் அம்மான்னா அம்மாதான் என்று சொல்லுகிற அளவுக்கு அவ்வளவு பாந்தமாகவும் யதார்த்தமாகவும் நடிக்கும் நடிகைதான் சரண்யா. முன்பு போல இயக்குனர்களும் அவர் வீட்டை மொய்ப்பதில்லை. எப்படியிருந்தாலும் அவர் நடிக்கப் போவதில்லை. எதுக்கு அலைஞ்சு டைம் வேஸ்ட் என்று வேறொரு நடிகையின் ஆபிஸ் பக்கம் ஒதுங்கிவிடுகிறார்கள். தினந்தோறும் ஒரு படம் கமிட் ஆகி வருவதால் திடீர் அம்மா நடிகைக்கு குஷியோ குஷி. இப்ப கூட சரண்யா தன் முடிவை மாத்திகிட்டு வந்தால், நாங்க நல்ல நல்ல கேரக்டர்கள் கொடுக்க ரெடி என்று கூறுகிற இயக்குனர்களையும் குண்டு கட்டாக இந்த நடிகையிடம் கூட்டி வருகிற தரகர்களும் பெருகிற வருகிறார்களாம் கோடம்பாக்கத்தில். அம்மா நடிகைகளுக்கு இவ்ளோ டிமாண்டா ஊர்ல?

மூலக்கதை