இளம் வீரர்களை சேர்க்க வேண்டியது அவசியம்: கவாஸ்கர் வலியுறுத்தல்

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 22, ஜனவரி 2016 (1:21 IST)

மாற்றம் செய்த நாள் :22, ஜனவரி 2016 (1:21 IST)

இளம் வீரர்களை சேர்க்க வேண்டியது அவசியம்: கவாஸ்கர் வலியுறுத்தல் 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தொடர்ந்து 4 ஆட்டங்களில் தோற்றது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். 

4 ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெறும் நிலையில் இருந்து தோற்றது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. இந்த தொடர் முடிந்ததும் நாம் சில கடினமான நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். அணியை முற்றிலும் மாற்ற வேண்டும் என்று கூறவில்லை. ஆனால் சில வீரர்கள் தங்களது முந்தைய தவறுகளில் இருந்து பாடம் கற்கவில்லை. குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு 3 அல்லது 4 முறை வந்து விளையாடிய பிறகும் ஏற்கனவே செய்த தவறுகளை திருத்திக்கொள்ளவில்லை. 2019–ம் ஆண்டு உலக கோப்பைக்கு இந்திய அணியை வலுப்படுத்த வேண்டும் என்றால், அணியில் சில இளம் வீரர்களை சேர்க்க வேண்டியது அவசியம். தொடர்ந்து இரு ஆட்டங்களில் அஸ்வினை ஓரங்கட்டியது நல்ல முடிவல்ல என்றார்.

மூலக்கதை