இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலியா வெற்றி

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 13, ஜனவரி 2016 (7:25 IST)

மாற்றம் செய்த நாள் :13, ஜனவரி 2016 (7:25 IST)

இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலியா வெற்றி

5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாட இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் செவ்வாய்க்கிழமை நடந்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் ரோகித் சர்மா 171, விராத் கோலி 91, தோனி 18 ரன்கள் எடுத்தனர். 

இந்திய அணி நிர்ணயித்த 310 ரன்கள் இலக்கை ஆஸ்திரேலிய அணி மிகச்சுலபமாக விரட்டி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 310 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது.

மூலக்கதை