அமலாபாலை தொடர்ந்து அசின்
Monday, 18 January 2016 08:07
மதிகெட்டு போனாலும் போவலாம், மானம் கெட்டுப் போகக் கூடாதுன்னு சொல்வாங்க கிராமத்தில்! தமிழ்சினிமாவில் எந்த நடிகைக்கு கல்யாணம் என்ற செய்தி வந்தாலும்,
மதியா? மானமா? பிரச்சனையால் சிக்கித்தவிப்பார்கள் சிலர். அப்படியொரு சிக்கலுக்கு சமீபத்தில் ஆளானவர் அமலாப்பாலை தமிழில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் ஒருவர். அமலாவின் திருமணத்திற்கு ஊர் உலகத்திற்கெல்லாம் பத்திரிகை கொடுத்தவர், இவரை மட்டும் நிதானமாக தவிர்த்தார். அப்படிதான் ஆகும் போலிருக்கிறது அசினை தமிழில் அறிமுகப்படுத்தியவர்களின் நிலைமையும். இன்னும் சில தினங்களில் நடைபெறவிருக்கும் அசின்-ராகுல் திருமணம் ஏக தடபுடலாக ஏற்பாடாகி வருகிறது. ஆனால் இன்னும் நம்ம ஊரிலிருக்கும் அசின் வாழ்வு சிறக்க காரணமான சிலருக்கு இன்விடேஷன் வந்து சேரவில்லையாம். வரும்... ஆனா வராது நிலைமைதான் இந்த நிமிஷம் வரைக்கும். என்ன நடக்குமோ?