தோல்விக்கு காரணம் என்ன?: தோனி விளக்கம்

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 17, ஜனவரி 2016 (19:46 IST)

மாற்றம் செய்த நாள் :17, ஜனவரி 2016 (19:46 IST)

தோல்விக்கு காரணம் என்ன?: 

தோனி விளக்கம்

ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி முதல் மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் தோல்வியடைந்து, தொடரை இழந்துள்ளது.

போட்டிக்குப் பின் பேசிய இந்திய அணி கேப்டன் டோனி,   ‘’மோசமான பீல்டிங் காரணமாகவே இந்த போட்டியில் தோல்வியை தழுவினோம். குறைந்தது மூன்று பவுண்டரிகளையாவது எளிதாக தடுத்து இருக்க முடியும். இந்த போட்டியில் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

அறிமுக போட்டியில் விளையாடி ரிஷி தவன் மற்றும் குர்கிரத் ஆகியோர் சிறப்பாகவே பந்து வீச்சினர். எனினும், மற்றொரு இளம் வீரரான ஷரன் இன்று நன்றாக வீசவில்லை. இதனால் பவுலர்களை மாற்றுவதில் சிரமமாக இருந்தது.

ஆஸ்திரேலியா கேட்பன் ஸ்டீவன் ஸ்மித் கூறுகையில், இந்திய பேட்ஸ்மேன்களை 295 ரன்களுக்கு கட்டுப்படுத்தினோம். நாங்கள் பேட்டிங் செய்யும் போது சில விக்கெட்டுகளை இழந்தாலும், இறுதியில் மேக்ஸ்வெல் அதிரடியால் வெற்றி பெற்றோம்.

ஆட்டநாயகன் விருது பெற்ற மேக்ஸ்வெல் கூறுகையில், எனக்கு பேச்சே வரவில்லை. இது ஓர் அற்புதமான வெற்றி. கடந்த சில மாதங்களாக அதிரடியாக விளையாடி வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அதிக இடைவெளி இல்லாமல் போட்டிகளில் விளையாடி வருகிறோம். அதனால் இன்று இரவு ஒரு சிறிய கொண்டாட்டம் இருக்கலாம்’’ என்றார்.

மூலக்கதை