புதிய சாதனை படைத்தார் விராட் கோலி

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 17, ஜனவரி 2016 (17:13 IST)

மாற்றம் செய்த நாள் :17, ஜனவரி 2016 (17:13 IST)

 புதிய சாதனை படைத்தார் விராட் கோலி

இந்தியாவின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக வலம் வரும் விராட் கோலி, அடுக்கடுக்கான பல புதிய சாதனைகளை படைத்துவருகிறார். அந்த வகையில், ஆஸ்ஹிரே லியாவுக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியின் போது, களம் இறங்கிய விராட் கோலி புதிய உலக சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அதாவது இன்றைய போட்டியில்,19–வது ரன்னை எடுத்தப் போது வீராட் கோலி ஒருநாள் போட்டியில் 7 ஆயிரம் ரன்னை வேகமாக கடந்தவர் என்ற சாதனையை பிடித்தார். 

அவர் 168–வது போட்டியில் 161–வது இன்னிங்சில் இந்த ரன்னை எடுத்து வரலாற்று சாதனை படைத்தார். இதற்கு முன்பு தென் ஆப்பிரிக்க கேப்டன் டி வில்லியர்ஸ் 172 போட்டியில் 166 இன்னிங்சில் 7 ஆயிரம் ரன்னை கடந்ததே சாதனையாக இருந்தது. 2014–ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டிவில்லியர்ஸ் இந்த சாதனையை படைத்து இருந்தார். அவரது இந்த சாதனையை கோலி இன்று முறியடித்தார்.

இவர்களுக்கு அடுத்த படியாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி (174 இன்னிங்ஸ்), லாரா (183), டெஸ்மான்ட் ஹெயன்ஸ் (183), காலிஸ் (188), தெண்டுல்கர் (189) ஆகியோர் அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர்.

மூலக்கதை