தமிழக மீனவர்கள் 3 பேர் சிறைப்பிடிப்பு

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 17, ஜனவரி 2016 (14:49 IST)

மாற்றம் செய்த நாள் :17, ஜனவரி 2016 (14:49 IST)

தமிழக மீனவர்கள் 3 பேர் சிறைப்பிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் இந்திய எல்லையான கோடியக்கரை தென்கிழக்கு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ஒரு விசைப்படகையும் அதிலிருந்து 3 மீனவர்களையும் சுற்றிவளைத்தனர்.சுற்றிவளைத்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றனர். சிறைப்பிடிக்கப்பட்ட 3 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றுள்ளனர். 

மூலக்கதை