மேற்கு ஆபிரிக்க நாடான பர்கினா- பஷோவில் தீவிரவாதிகள் தாக்குதல்; 23 பேர் உயிரிழப்பு!

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
மேற்கு ஆபிரிக்க நாடான பர்கினா பஷோவில் தீவிரவாதிகள் தாக்குதல்; 23 பேர் உயிரிழப்பு!

Sunday, 17 January 2016 05:09

மேற்கு ஆபிரிக்க நாடான பர்கினா- பஷோவில் நட்டத்திர விடுதியொன்றில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். 

பர்கினா- பஷோவின் தலைநகரான ஒகாடோகாவில் சர்வதேச விமான நிலையம் அருகே 'ஸ்பிலென்டிட்' என்ற நட்சத்திர விடுதியும், அதன் அருகே 'கபசினோ' என்ற உணவகமும் உள்ளன. இந்த இரண்டு இடங்களிலும் கடந்த வெள்ளி இரவு தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலினாலேயே 23 பேர் உயிரிழந்துள்ளனர். 33 பேர் படுகாயமடைந்தனர். விடுதிக்குள் இருந்த 150க்கும் அதிகமானோரை பர்கினா- பஷோ படையினர், பிரான்ஸ் இராணுவத்தின் உதவியோடு மீட்டுள்ளது.

 

மூலக்கதை