​ஒருங்கிணைந்த பயிர் காப்பீடு திட்டம் அவசியம்: தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
​ஒருங்கிணைந்த பயிர் காப்பீடு திட்டம் அவசியம்: தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு

பருவநிலை மாறுபாடுகள் அதிகரித்து வரும் தற்போதைய சூழலில், ஒருங்கிணைந்த பயிர் காப்பீடு திட்டம் அவசியம் என தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது. 

டெல்லியில் பேசிய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் இணை இயக்குநர் Chandra Bhushan இதனைத் தெரிவித்தார். சமீபத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ள புதிய பயிர் காப்பீடு திட்டம், நல்ல முயற்சி என பாராட்டு தெரிவித்துள்ளார். 

அதேநேரத்தில், இத்திட்டத்தில் மேம்படுத்த வேண்டிய அம்சங்கள் பல உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதிகமான மழையும், அதிகமான வறட்சியும் இனி அதிகரிக்கும் என தெரிவித்துள்ள சந்திரா பூஷன், இவற்றால் விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க மேம்படுத்தப்பட்ட காப்பீடு திட்டம் அவசியம் என கூறினார்.   

மூலக்கதை