​பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியது மத்திய அரசு

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
​பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியது மத்திய அரசு

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

கச்சா எண்ணையின் விலை பீப்பாய் 30 டாலருக்கும் கீழாக சரிந்துள்ள நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைத்தன. அதற்கு முன்பாக, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியது. 

ஒரு லிட்டர் பெட்ரோல் மீது 75 பைசா மற்றும், ஒரு லிட்டர் டீசல் மீது 2 ரூபாய் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு 3 ஆயிரத்து 700 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை இம்மாதம் 3ம் தேதி உயர்த்திய மத்திய அரசு, இரண்டு வாரங்களுக்குள்ளாக மீண்டும் உயர்த்தியிருக்கிறது. கடந்த 3 மாதங்களில் 4 முறை கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியிருக்கிறது. 

இதன் மூலம், அரசுக்கு 13 ஆயிரத்து 700 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. 

மூலக்கதை