இந்திய அணியுடனான 2-வது ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா அணி வெற்றி

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 15, ஜனவரி 2016 (19:24 IST)

மாற்றம் செய்த நாள் :15, ஜனவரி 2016 (19:24 IST)

இந்திய அணியுடனான 2-வது ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா அணி வெற்றி

இந்திய அணியுடனான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி இரண்டுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

 

பிரிஸ்பெனில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்தது. 309 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 49-வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது.

இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் ஷர்மா 124 ரன்களும், ரஹானே 89 ரன்களும் எடுத்தனர். விராட் கோலி 59 ரன்கள் எடுத்தார்.

ஆஸ்திரேலிய அணியில் ஷேன் மார்ஷ், ஆரன் பின்ச் ஆகியோர் தலா 71 ரன்கள் எடுத்தனர். ஜார்ஜ் பெய்லியுடன் இணைந்து, வேகமாக ரன்கள் சேர்த்த கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 46 ரன்கள் எடுத்தார். பெய்லி 76 ரன்களும், மேக்ஸ்வெல் 26 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

  

மூலக்கதை