5வது முறையாக மெஸ்சி தேர்வு

நக்கீரன்  நக்கீரன்
5வது முறையாக மெஸ்சி தேர்வு

பதிவு செய்த நாள் : 15, ஜனவரி 2016 (6:50 IST)

மாற்றம் செய்த நாள் :15, ஜனவரி 2016 (6:50 IST)

5வது முறையாக மெஸ்சி தேர்வு

ஒவ்வொரு ஆண்டும் உலகின் சிறந்த கால்பந்து வீரர்–வீராங்கனைகளை சர்வதேச கால்பந்து சங்கம் (பிபா) தேர்வு செய்து அறிவித்து வருகிறது. தேசிய கால்பந்து அணிகளின் கேப்டன்கள், பயிற்சியாளர்கள், பிபாவினால் அங்கீகாரம் பெற்ற குறிப்பிட்ட சர்வதேச கால்பந்து பத்திரிகையாளர்கள் ஆகியோர் அளிக்கும் வாக்குகளின் மூலம் இந்த விருதுக்கான வீரர்–வீராங்கனைகள் இறுதி செய்யப்படுகிறார்கள்.

2015–16ம் ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான பட்டியலில் உலகின் சிறந்த கால்பந்து வீரராக அர்ஜென்டினா வீரர் லயோனல் மெஸ்சி 5வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விருது பெற்ற மெஸ்சி அளித்த பேட்டியில், ‘கிறிஸ்டியானோ ரொனால்டோ வென்ற பிறகு மீண்டும் நான் சிறந்த வீரர் விருதை பெற்று இருக்கிறேன். விருது மேடைக்கு மீண்டும் திரும்பி இருப்பது மிகவும் சிறப்புக்குரிய தருணமாகும். 5வது முறையாக நான் விருதை பெற்று இருப்பது வியப்புக்குரியதாகும். சிறுவயதில் இந்த அளவுக்கு நான் சாதிப்பேன் என்று கனவு கூட கண்டதில்லை’ என்று தெரிவித்தார்.

மூலக்கதை