2வது பெண் குழந்தைக்கு தந்தை ஆன வார்னர்

நக்கீரன்  நக்கீரன்
2வது பெண் குழந்தைக்கு தந்தை ஆன வார்னர்

பதிவு செய்த நாள் : 15, ஜனவரி 2016 (6:26 IST)

மாற்றம் செய்த நாள் :15, ஜனவரி 2016 (6:26 IST)

2வது பெண் குழந்தைக்கு தந்தை ஆன வார்னர்


ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னரின் மனைவி கேன்டிசுக்கு பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்காக சிட்னி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.தமது மகளுக்கு இந்தி ரே என வார்னர் பெயரிட்டுள்ளார்.

இந்த தம்பதிக்கு ஏற்கனவே 1¼ வயதில் லிவ்மா என்ற பெண் குழந்தை உள்ளது. இரண்டு குழந்தைகளுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருக்க விரும்புவதால், வார்னருக்கு 2 ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியுடனான இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகளில் வார்னர் விளையாடவில்லை.

மூலக்கதை