டூயட் பாட ஆசைப்பட்டவருக்கு வந்த சோதனை இது

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
டூயட் பாட ஆசைப்பட்டவருக்கு வந்த சோதனை இது

Thursday, 14 January 2016 10:29

பல நாள் கழிச்சு இப்போதான் ஒரு உண்மை வெளிச்சத்துக்கு வந்திருக்கு.

வேதாளம் படத்தில் அஜீத்திற்கு தங்கையாக லட்சுமிமேனன் நடித்தாரல்லவா? அந்த கேரக்டரில் முதலில் நடிக்க அழைக்கப்பட்டவர் ஊதாக்கலரு ஸ்ரீதிவ்யாதானாம். சம்பளம் ஒரு பிரச்சனையே இல்ல என்று இவர்கள் கொக்கிப் போட, முடியவே முடியாதுன்னு இவர் உக்கிப் போட்டிருக்கிறார். ஏன்? ஒரு பிரபல கதாநாயகி தங்கச்சியா நடிச்சா, பின்னாடி வர்ற டைரக்டர்கள் எல்லாரும், வாம்மா தங்கச்சி என்றே வருவார்கள் என்பது ஒரு சிக்கல். “அஜீத் சார் கூட டூயட் ஆடணும்னு நினைச்சு அதுக்காக முயற்சி பண்ற ஆளு நானு. என்னை போயி தங்கச்சியா நடின்னா, மனசு கேக்குமா, அதான்” என்றார் ஸ்ரீதிவ்யா. முயற்சி பண்ணுங்க திவ்யா... இன்னும் காலம் இருக்கு!

மூலக்கதை